Search is not available for this dataset
செல்வம் நிலையாமை
[செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது]
பாடல்:
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.
குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று.
கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று.
விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths 16 7.39k |
|---|
செல்வம் நிலையாமை
பொருட்பால்
சுற்றந்தழால்
அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போல்
பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.
குறிப்புரை: அழல் மண்டு போழ்தின்அடைந்தவர் கட்கெல்லாம் நிழல்மரம் போல் -வெயிலின் அழல் மிகுந்த காலத்தில் தன்னைஅடைந்தவர்கட் கெல்லாம... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
சுற்றந்தழால்
அடுக்கன் மலைநாட! தற்சேர்ந் தவரை
எடுக்கல மென்னார் பெரியோர்;- அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே,
தன்காய் பொறுக்கலாக் கொம்பு.
குறிப்புரை: அடுக்கல் மலை நாட -ஒன்றன் மேலொன்றடுக்கிய மலைகளையுடைய நாடனே,தன் சேர்ந்தவரை எடுக்கலம் என்னார் பெரியோர் -தம்மைச் சேர்ந்த சுற்றத்தவரை ஆத... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
சுற்றந்தழால்
உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை;- நிலைதிரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு.
குறிப்புரை: உலகு அறியத் தீரக்கலப்பினும் - யாவரும். அறியும்படி முழுதும் இணங்கிநேசங் கொண்டாலும், நில்லா சில பகல் ஆம்சிற்றினத்தார் கேண்மை - கீ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
சுற்றந்தழால்
இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல்
என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்க ளாகற்பா லார்.
குறிப்புரை: இன்னர் - இவர்இத்தகையவர், இனையர் - இவர் இவ்வளவினர்; எமர் -இவர் எம்மைச் சேர்ந்தவர், பிறர் - இவர்பிறரைச் சேர்ந்தவர், என்னுஞ் சொல் என... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
சுற்றந்தழால்
பொற்காலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போற் கிளைஞர்மாட்டு
எக்கலத் தானு மினிது.
குறிப்புரை:பொற்காலத்துப் பெய்தபுலிஉகிர் வான் புழுக்கல் - பொன்னாலானஉண்கலத்தில் இட்டுவைத்த புலியின்நகத்தைப்போன்ற சிறந்த சோற்றை, அக்காரம்பால... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
சுற்றந்தழால்
நாள்வாய்ப் பெறினுந்தந் நள்ளாதா ரில்லத்து
வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்;- கேளாய்,
அபராணப் போழ்கின் அடகிடுவ ரேனுந்
தமராயார் மாட்டே இனிது.
குறிப்புரை: நாள்வாய்ப் பெறினும்தம் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெம் கருனைவேம்பாகும் - காலத்தில் பெற்றாலும் தம்உறவாகாதவர் வீட்டின் ஒப்புரவோடு கூ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
சுற்றந்தழால்
முட்டிகை போல முனியாது வைகலுங்
கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;
சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டா ரெனப்படு வார்.
குறிப்புரை: முட்டிகை போல முனியாதுவைகலும் கொட்டியுண்பாரும் குறடுபோல் கைவிடுவர் -கம்மாளரின் சம்மட்டிபோல் நாடோறும்வெறுத்தலில்லாமல் தம்மை இடித்திடித்து வயிறுபிழ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
சுற்றந்தழால்
நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ! - இறுமளவும்
இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால்.
குறிப்புரை: நறுமலர்த் தண் கோதாய்- சிறந்த மலர்களாற் றொடுக்கப்பட்ட குளிர்ந்தமாலையை யணிந்த மாதே, நட்டார்க்கு நட்டார்மறுமையும் செய்வதொன்று உண்டோ ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
சுற்றந்தழால்
விருப்பிலா ரில்லத்து வேறிருந் துண்ணும்
வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம்; - விருப்புடைத்
தன்போல்வா ரில்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போ டியைந்த அமிழ்து.
குறிப்புரை: விருப்பு இலார் இல்லத்துவேறு இருந்து உண்ணும் வெருகு கண் வெம் கருனை வேம்புஆகும் - அன்பில்லாதவர் வீட்டில் தனியே இருந்... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பாராய்தல்
நட்புச் செய்தற்குரியாரை அவர் கல்வியறிவு ஒழுக்க முதலியவற்றால் ஆராய்ந்து கொள்ளுதல்.
கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங்
குருத்திற் கரும்புதின் றற்றே;- குருத்திற்
கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
மதுர மிலாளர் தொடர்பு.
குறிப்புரை: கருத்துணர்ந்துகற்றறிந்தார் கேண்மை ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பாராய்தல்
இற்பிறப் பெண்ணி இடைதிரியா ரென்பதோர்
நற்புடை கொண்டமை யல்லது, - பொற்கேழ்
புனலொழுகப் புள்ளிரியும் பூங்குன்ற நாட!
மனமறியப் பட்டதொன் றன்று.
குறிப்புரை: பொன்கேழ் புனல் ஒழுகப்புள் இரியும் பூ குன்ற நாட - பொன்னின் நிறம்அருவியிற் பொருந்தி வருதலால் பறவைகள் அஞ்சிநீங்குகின்ற பொலிவினையுடைய மல... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பாராய்தல்
யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;- யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.
குறிப்புரை: யானையனைவர் நண்பு ஒரீஇ- யானையை ஒத்த இயல்புடையாரது நேயத்தை நீக்கி,நாய் அனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் -நாயை ஒத்த இயல்புடைய... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பாராய்தல்
பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோ டொட்டார்; பலநாளும்
நீத்தா ரெனக்கை விடலுண்டோ, தந்நெஞ்சத்
தியாத்தாரோ டியாத்த தொடர்பு.
குறிப்புரை: பலநாளும்பக்கத்தாராயினும் நெஞ்சில் சிலநாளும்ஒட்டாரோடு ஒட்டார் - பலநாளும் அருகிலிருந்துபழகினாராயினும் மனத்திற் சில நாளாயினும்நட்புப... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பாராய்தல்
கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி;- தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாரும் நட்பாரும் இல்.
குறிப்புரை: கோட்டுப்பூப் போலமலர்ந்து பின் கூம்பாது வேட்டதே வேட்டதாம்நட்பாட்சி - மரங்களிற் பூக்கும் பூக்கள் முதலில்மலர்ந்து பின் தாம் உதி... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பாராய்தல்
கடையாயார் நட்பிற் கமுகனையர்; ஏனை
இடையாயார் தெங்கி னனையர்;- தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.
குறிப்புரை: நட்பில் -நேயமுறைமையில், கடையாயார் கமுகு அனையர் -கீழோர் பாக்கு மரத்தின் இயல்பை ஒத்தவர்;இடையாயார் தெங்கு அனையர் - இடைத்தரமானவர்தென்னை மர... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பாராய்தல்
கழுநீருட் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் ; - விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய்.
குறிப்புரை: கழுநீருள் கார் அடகேனும்ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் -கழுநீருட் பெய்து சமைத்த கறுத்த இலைக்கறியேனும்ஒருவன் அன்புடையதாகப்... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பாராய்தல்
நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கா லனையார் தொடர்பு.
குறிப்புரை: நாய்க்கால்சிறுவிரல்போல் நன்கு அணியராயினும் ஈக்கால்துணையும் உதவாதார் நட்பு என்னாம் நாய்க்காலின்சிறிய விரல்கள் ந... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பாராய்தல்
தெளிவிலார் நட்பின் பகைநன்று ; சாதல்
விளியா அருநோயின் நன்றால் - அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல
புகழ்லின் வைதலே நன்று.
குறிப்புரை: தெளிவிலார் நட்பின்பகை நன்று - நம்பத் தகாதவரது நட்பினும் அவரது பகைநலந்தரும் ; சாதல் விளியா அருநோயின் நன்று -தீராத கொடிய நோயினும் இறத்தல் நலமாகும் ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பாராய்தல்
மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇஇப் பின்னைப் பிரிவு.
குறிப்புரை: மரீஇப் பலரோடு பலநாள்முயங்கிப் பொரீஇப் பொருள் தக்கார்க் கோடலேவேண்டும் - பல நாள் பலரோடும் சேர்ந்து ஒத்துக்கலந்து பழகிப் பொருளாகத் தக்கா... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பிற் பிழைபொறுத்தல்
நட்பினரிடத்துக் குற்றம்உண்டாயின், அஃது அறியாமையானதல் அல்லதுஊழினானதால் உண்டாதலன்றி வேறின்றாகலின்பழைமை கருதி அதனைப் பொறுத்து, அவர் நட்பினையேபாராட்டி யொழுகுதல்.
நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரைய... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பிற் பிழைபொறுத்தல்
செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார்.
மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.
குறிப்புரை: செறுத்தோறுஉடைப்பினும் செம்புனலோடு ஊடார் மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர் - நீரின் நன்மையைவிரும்பி வாழ்வோர... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பிற் பிழைபொறுத்தல்
இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
பொறுத்தல் தகுவதொன் றன்றோ ; - நிறக்கோங்கு
உருவவண் டார்க்கு முயர்வரை நாட !
ஒருவர் பொறையிருவர் நட்பு.
குறிப்புரை: இறப்பவே தீய செயினும்தம் நட்டார் பொறுத்தல் தகுவ தொன்றன்றோ -தம்மோடு நட்புக் கொண்டவர் மிகவுந் தீங்குகள்செய்தாலும் அவற்றைப் பொறுத்த... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பிற் பிழைபொறுத்தல்
மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தங்
கடுவிசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப !
விடுதற் கரியா ரியல்பிலரேல் நெஞ்சஞ்
சுடுதற்கு மூட்டிய தீ.
குறிப்புரை: மடி திரை தந்திட்டவான்கதிர் முத்தம் கடுவிசை நாவாய் கரைஅலைக்கும் சேர்ப்ப - மிக்க விசையோடு வருகின்றமரக்கலங்கள் மடிந்துவிழுகின்ற அலை... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பிற் பிழைபொறுத்தல்
இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் ; பொன்னொடு
நல்லிற் சிதைத்ததீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.
குறிப்புரை: இன்னாசெயினும்விடற்பால ரல்லாரைப் பொன்னாகப் போற்றிக்கொளல் வேண்டும் - இடையே தீயன செய்தாலும்நட்புவிடுந் தன்மையரல்லாரைப் பொன... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பிற் பிழைபொறுத்தல்
இன்னா செயினும் விடுதற் கரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப ! களைபவோ
கண்குத்திற் றென்றுதங் கை.
குறிப்புரை: துன் அரு சீர் விண் குத்துநீள் வரை வெற்ப - அணுகுதற்கரிய சிறப்பினையுடைய,வானத்தைக் குத்தும் நீண்ட மூங்கில்களையுடையமலைநாடனே!, கண... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பிற் பிழைபொறுத்தல்
இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர் ; கலந்தபின்
தீமை எடுத்துரைக்குந் திண்ணறி வில்லாதார்
தாமும் அவரிற் கடை.
குறிப்புரை: இலங்கு நீர்த்தண்சேர்ப்ப - விளங்குகின்ற நீரினையுடைய கடலின்குளிர்ந்த துறைவனே! . இன்னா செயினும் கலந்துபழிகாணர் சான்றோர் - நட... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பிற் பிழைபொறுத்தல்
ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்
நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால்! - காதல்
கழுமியார் செய்த கறங்கவி நாட!
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.
குறிப்புரை: ஏதிலார் செய்ததுஇறப்பவே தீது எனினும் நோதக்கது என் உண்டாம்நோக்குங்கால் - நண்பரல்லாத அயலார் செய்ததுமிகவுந் தீங்குடைய தென்றாலு... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பிற் பிழைபொறுத்தல்
தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தா ராயின், அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல்.
குறிப்புரை: தமர் என்று தாம்கொள்ளப்பட்டவர் தம்மைத் தமரன்மை தாம்அறிந்தாராயின் - நண்பர் என்று தாம் நட்புக்கொண்டவரிடத்து இடையே நண்பராகாத் தன்மையைத்... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நட்பிற் பிழைபொறுத்தல்
குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான்
மறைமகாவா விட்டவன் செல்வுழிச் செல்க,
அறைகடல்சூழ் வையம் நக.
குறிப்புரை: குற்றமும் ஏனைக் குணமும்ஒருவனை நட்டபின் நாடித் திரிவேனல் - குற்றமும்மற்றைக் குணமும் ஒருவனை நட்புச் செய்தபின்அவனிடம் தேடிக் கொண்டு திர... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கூடாநட்பு
செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
இறைத்துநீர் ஏற்றம் கிடப்பார், - கறைக்குன்றம்
பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட!
தங்கரும முற்றுந் துணை.
குறிப்புரை: கறைக் குன்றம் பொங்குஅருவி தாழும் புனல்வரை நல் நாட - கரிய மலைகள்பொங்கும் அருவிநீர் ஒழுகப்பெறுகின்றநீரெல்லையையுடைய சிறந்த நாடனே! செறிப்பு இல... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கூடாநட்பு
சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி
வறந்தக்காற் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்காற் சீரிலார் நட்பு.
குறிப்புரை: வால் அருவி நாட -வெண்ணிறமான மலையருவிகளையுடைய நாடனே!, சீரியார்கேண்மை சிறந்த சிறப்பிற்றாய் மாரிபோல்மாண்ட பயத்ததாம் - தக்கோர் நட்பு மிக்கமேம்பாட... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கூடாநட்பு
நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றல் - நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்து ளொன்று.
குறிப்புரை: நுண்ணுணர்வினாரொடு கூடிநுகர்வுடைமை விண்ணுலகே ஒக்கும் விழைவிற்று - நுட்பஉணர்வுடையாரோடு கலந்து பழகி யின்புறுதல்விண்ணுலகத்தின் இன்பமே போலும்... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கூடாநட்பு
பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும் - அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட !
பந்தமி லாளர் தொடர்பு .
குறிப்புரை: அருகெல்லாம் சந்தனநீள்சோலைச சாரல் மலைநாட -பக்கங்களிலெல்லாம் நீண்ட சந்தனச்சோலைகளின் சாரலையுடைய மலைநாடனே!, பந்தம்இலாளர் தொடர்பு பெருகுவது ப... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கூடாநட்பு
செய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனைச்
செய்யாது தாழ்த்துக் கொண் டோட்டலும் - மெய்யாக
இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறூஉம் பெற்றி தரும்.
குறிப்புரை: செய்யாத செய்தும் நாம்என்றலும் - பிறர் செய்யாத செயல்களை யாம் செய்துமுடிப்பேம் என்று வீறு கூறுதலும், செய்தவனைச்செய்ய... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கூடாநட்பு
ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர்க் குவளையை ஆம்பலொக் கல்லா
பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார்
கருமங்கள் வேறு படும்.
குறிப்புரை: ஒரு நீர்ப் பிறந்துஒருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையைஆம்பல் ஒக்கல்லா - ஒரு குளத்து நீரில் தோன்றிஒன்றாய் வளர்ந்தாலும் மணம்வீசும் ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கூடாநட்பு
முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.
குறிப்புரை: சிறுமந்தி முற்பட்டதந்தையை நெற்றுக் கண்டன்ன விரலால் குற்றிஞெமிர்த்திட்டு முற்றல் பறிக்கும் மலைநாட -இளங்குரங்கு, பயற்றங்காயின் நெற்றைக... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கூடாநட்பு
முட்டுற்ற போழ்தின் முடுகியென் னாருயிரை
நட்டா னொருவன்கை நீட்டேனேல் - நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க
நெடுமொழி வையம் நக.
குறிப்புரை: முட்டுற்ற போழ்தில்முடுகி என் ஆர் உயிரை நட்டான் ஒருவன் கைநீட்டேனேல் - நண்பனுக்கு இடுக்கண் உண்டானகாலத்தில் விரைந்து எனது பெறற்கரிய உயிரைநட்ப... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கூடாநட்பு
ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ ;- தேம்படு
நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்பு.
குறிப்புரை: தேன் படு நல்வரை நாட -தேன் உண்டாகின்ற உயர்ந்த மலைகளையுடைய நாடனே!நயம் உணர்வார் நண்பு ஒரீஇப் புல் அறிவினாரோடுநட்பு - இனியதறியும் பேரறிஞரது நண்ப... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
கூடாநட்பு
உருவிற் சுமைந்தான்கண் ஊராண்மை யின்மை
பருகற் கமைந்தபால் நீரளா யற்றே
தெரிவுடையார் தீயினத்தா ராகுதல் நாகம்
விரிபெடையோ டாடிவிட் டற்று.
குறிப்புரை: உருவிற்கு அமைந்தான் கண் ஊராண்மை இன்மை பருகற்கு அமைந்த பால் நீர் அளாய் அற்று - காட்சிக்கு இனியனாய் உருவமைந்த ஒருவனிடம் ஒப்புரவில்லாமை, பருகு... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவுடைமைபகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராது
அணங்கருந் துப்பின் அரா.
குறிப்புரை: இளம் பிறை ஆயக்கால்திங்களைச் சேராது அணங்கு அரு துப்பின் அரா -பிறிதொன்றினால் வருத்துதலில்லாதவலிமையினையுடைய இராகுவென்னும் பாம்பு, மதியத்தைஅஃத... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவுடைமை
நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்
கணிகல மாவ தடக்கம் - பணிவில்சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரங் கூறப் படும்.
குறிப்புரை: நளிகடல் தண் சேர்ப்ப -பெரிய கடலின் குளிர்ந்த துறைவனே, நல்கூர்ந்தமக்கட்கு அணிகலமாவது அடக்கம் -வறுமையுற்றமாந்தர்க்கு அணிகலம் போற் சிறப்பதுஅடக்கமு... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவுடைமை
எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகாது
எந்நாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால் ;
தன்னாற்றா னாகும் மறுமை ; வடதிசையுங்
கொன்னாளர் சாலப் பலர்
குறிப்புரை: எந்நிலத்து வித்துஇடினும் காஞ்சிரங்காழ் தெங்கு ஆகாது - எந்தநிலத்தில் விதையை இட்டாலும் எட்டி விதை தென்னைமரமாக வளராது ; எந்நாட்டவ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவுடைமை
வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது.
குறிப்புரை: வேம்பின் இலையுட்கனியினும் வாழை தன் தீஞ்சுவை யாதும் திரியாது -வேம்பின் இலையுள் இருந்து பழுத்தாலும் வாழைப்பழம்தனது இன்சுவையிற் சிறிதும் வேறுபட... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவுடைமை
கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
உப்பீண் டுவரி பிறத்தலால்; தத்தம்
இனத்தனைய ரல்லர் எறிகடற்றண் சேர்ப்ப
மனத்தனையர் மக்களென் பார்.
குறிப்புரை: எறிகடல் தண் சேர்ப்ப -அலைகள் வீசுகின்ற கடலின் குளிர்ந்தகரையையுடையவனே!, கடல் சார்ந்தும் இன் நீர்பிறக்கும் மலைசார்ந்தும் உப்பு ஈண்ட... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவுடைமை
பராஅரைப் புன்னை படுகடற் றண்சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ? நல்ல
மரூஉச்செய் தியார்மாட்டுந் தங்கு மனத்தார்
விராஅஅய்ச் செய்யாமை நன்று.
குறிப்புரை: பரு அரைப் புன்னை படுகடல்தண் சேர்ப்ப - பருமனான அடிமரத்தையுடைய புன்னைமரங்கள் உண்டாகின்ற கடலின் குளிர்ந்தகரையையுடையவனே! ஒராலும் ஒட்டலும் ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவுடைமை
உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரிற் புணருமாம் இன்பம் - புணரின்;
தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.
குறிப்புரை: புணரின் - நட்புச்செய்தால், உணர உணரும் உணர்வுடையாரைப் புணரின்இன்பம் புணரும் - நாம் ஒன்றை உள்ளத்தால் உணரஅதனைக் குறிப்பால் உணர்ந்தொழுகுங்கூருணர்வுடையாரை... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவுடைமை
நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.
குறிப்புரை: நல் நிலைக்கண் தன்னைநிறுப்பானும் - சிறந்த நிலையில் தன்னைநிலைநிறுத்திக் கொள்வோனும், தன்னைநிலைகலக்கி கீழ் இடுவானும் -தனது முன் நிலை... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவுடைமை
கரும வரிசையாற் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாருஞ் சேறல் - அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடற் றண்சேர்ப்ப!
பேதைமை யன்ற தறிவு.
குறிப்புரை: அரு மரபின் ஓதம்அரற்றும் ஒலிகடல் தண் சேர்ப்ப - அரியதன்மையையுடைய அலைகள் முழங்கும் முழக்கமிக்ககடலின் குளிர்ந்த துறைவனே!, கரும வரிசையால் -தொழில் முறைமை... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவுடைமை
கருமமு முட்படாப் போகமுந் துவ்வாத்
தருமமுந் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே
முட்டின்றி மூன்று முடியுமேல் அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்.
குறிப்புரை: கருமமும் உட்படாபோகமும் துவ்வா தருமமும் தக்கார்க்கே செய்யா -பொருள் வரவுக் கேதுவான தொழின் முயற்சியினும்ஈடுபட்டு அதனால் இம்மைப் பயனாகத் தான் ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவின்மை
நுண்ணுணர் வின்மை வறுமை, அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ,
கண்ணவாத் தக்க கலம்.
குறிப்புரை: எண்ணுங்கால் -ஆராயுமிடத்து; நுண் உணர்வு இன்மை வறுமை - ஒருவனுக்குநுட்ப அறிவில்லாமையே வறுமையாவது; அஃது உடைமைபண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் -அந் நுட... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவின்மை
பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
அல்ல லுழப்ப தறிதிரேல் - தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே,
பூவின் கிழத்தி புலந்து.
குறிப்புரை: பல் ஆன்ற கேள்விப்பயன் உணர்வார் பாடு அழிந்து அல்லல் உழப்பதுஅறிதிரேல் - பல நிறைந்த கேள்விகாளல் உண்டாகும்பயனைத் தமது பழக்கத்தில் நுகர்ந்து... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவின்மை
கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் - மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்.
குறிப்புரை: கல் என்று தந்தை கழறஅதனை ஓர் சொல் என்று கொள்ளாது இகழ்ந்தவன் -இளமையில் தன் தந்தை ‘படி' என்று இடித்துக் கூற அதனைஒரு நற் சொல் என்று ஏற்காமற் பொரு... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவின்மை
கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று.
குறிப்புரை: கல்லாது நீண்ட ஒருவன் -கல்வியறிவு பெறாமல் வளர்ந்து விட்ட ஒருவன்,உலகத்து நல்லறிவான ரிடைப் புக்கு மெல்லஇருப்பினும் நாய் இருந்தற்று - உலகத்தில் உயர்... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவின்மை
புல்லாப்புன் கோட்டிப் புலவ ரிடைப்புக்குக்
கல்லாத சொல்லுங் கடையெல்லாம் - கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக் கறிந்து.
குறிப்புரை: புல்லாப் புன்கோட்டிப்புலவரிடைப் புக்குக் கல்லாத சொல்லும்கடையெல்லாம் - அறிவு நிரம்பாதகீழ்மக்களெல்லாரும் அவ்வாறே மெய்யறிவோடுபொருந்தா... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவின்மை
கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும் , எஞ்ஞான்றும்
பச்சோலைக் கில்லை யொலி.
குறிப்புரை: கற்றறிந்த நாவினார்சொல்லார் தம் சோர்வு அஞ்சி - கற்றுத்தெளிந்தநாவன்மையினையுடைய மேலோர் தம் தவறுதலுக் கஞ்சிமிகுதியாகப் பேசார்; மற்றையராவார் ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவின்மை
பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகுஞ் செவிக்கு.
குறிப்புரை: பன்றிக் கூழ்ப்பத்தரில் தேமா வடித்தற்று நன்றி அறியாமாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால் -நன்மையறியாத கீழ்மக்கட்கு அறமுற... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவின்மை
பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று!
கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா
நோலா உடம்பிற் கறிவு.
குறிப்புரை: பாலால் கழீஇப் பலநாள்உணக்கினும் வாலிதாம் பக்கம் இருந்தைக்குஇருந்தன்று - பலநாள் பாலினாற் கழுவிஉலர்த்தினாலும் வெண்ணிறம் உடையதாம் நிலைமைகரிக்கு இல்... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவின்மை
பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.
குறிப்புரை: பொழிந்து இனிதுநாறினும் பூமிசைதல் செல்லாது இழிந்தமை காமுறும்ஈப்போல் -தேன் சொரிந்து இனிது மணந்தாலும் மலரைஉண்ணுதற்குச... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
அறிவின்மை
கற்றா ருரைக்குங் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ் சுதைத்தலால், - மற்றுமோர்
தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.
குறிப்புரை: கற்றார் உரைக்கும் கசடுஅறு நுண் கேள்வி பற்றாது தன் நெஞ்சு உதைத்தலால் -கல்வியறிவு பெற்றோர் தெரிந்து சொல்கின்றகுற்றமில்லாத நுண்ணிய கேள்... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நன்றியில் செல்வம்
[யார்க்கும் நன்மை பயவாத செல்வம் என்பது பொருள்]
அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதுங் கடப்பாட்ட தன்று.
குறிப்புரை: அருகலதாகிப் பலபழுத்தக் கண்ணும் பொரிதாள் விளவினை வாவல்குறுகா - குறையாததாகிப் பல பழங்கள் பழுத்... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நன்றியில் செல்வம்
அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்.
குறிப்புரை: அள்ளிக்கொள்வு அன்னகுறுமுகிழவாயினும் கள்ளிமேல் கைநீட்டார் சூடும்பூஅன்மையால் - அள்ளிக் கொள்ளுதல் போல, நிறையச்சிறிய அரும்புகளுடையன... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நன்றியில் செல்வம்
மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்,
வல்லூற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்;
செல்வம் பெரிதுடைய ராயினும், சேட்சென்றும்
நல்குவார் கட்டே நசை.
குறிப்புரை: மல்கு திரையகடற்கோட்டு இருப்பினும் வல்ஊற்று உவர்இல்கிணற்றின்கட் சென்று உண்பர் - பலவாக நிறைந்தஅலைகளையுடைய கடற்கரையில் தாம்தங்... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நன்றியில் செல்வம்
புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையா ரிருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,
பட்டும் துகிலும் உடுத்து.
குறிப்புரை: புணர் கடல் சூழ்வையத்துப் புண்ணியமோ வேறு - கடல் நாற்புறமுஞ்சூழ்ந்து பொருந்தியிருக்கும் உலகத்தில் நல்வினைஎன்பது தனி நிலைமையுட... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நன்றியில் செல்வம்
நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன் றாகிய காரணம், - தொல்லை
வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்!
நினைப்ப வருவதொன் றில்.
குறிப்புரை: நல்லார் நயவர் இருப்பநயமிலாக் கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம் -உயர்ந்த அறிவு செயல்களுடையாரும் இனியருமானமேலோர் உலகத்திதல் வளமின்றியிருக்க,அவ்வ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நன்றியில் செல்வம்
நாறாத் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்!
நீராய் நிலத்து விளியரோ - வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து.
குறிப்புரை: நன் மலர்மேல் பொன்பாவாய் - சிறந்த தாமரை மலரின்மேல்வீற்றிருக்கும் பொன்னாலான பாவையை ஒத்ததிருமகளே!, நீறாய் நிலத்து விளியர் - நீசா... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நன்றியில் செல்வம்
நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;
பயவார்கட் செல்வம் பரம்பப் பயின்கொல்;
வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே.
நயவாது நிற்கு நிலை.
குறிப்புரை: நயவார்கண் நல்குரவுநாணின்றுகொல் - தாழ்ந்தொழுகி இரவாதநன்மக்கள்பால் உள்ள வறுமைக்குவெட்கமில்லைபோலும்; பயவார்கண் செல்வம்பரம்பப் பய... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நன்றியில் செல்வம்
வலவைக ளல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர்; - வலவைகள்
காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே
மேலாறு பாய விருந்து.
குறிப்புரை: வலவைகள் அல்லாதார்கால் ஆறு சென்று கலவைகள் உண்டு கழிப்பர் -நாணிலிகளல்லாத நல்லோர் தம் வறுமையால் ஊர்விட்டு ஊர் கால்வழி நடந்துபோய் அங்கங்குக்கிட... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நன்றியில் செல்வம்
பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும்;
வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து.
குறிப்புரை: பொன் நிறச் செந்நெல்பொதியொடு பீள் வாட மின் ஒளிர் வானம்கடலுள்ளும் கான்று உகுக்கும் - பொன்னின்நிறத்தையுடைய உயர்ந்த செ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
நன்றியில் செல்வம்
ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார்;- தூய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.
குறிப்புரை: ஓதியும் ஓதார்உணர்விலார் ஓதாதும் ஓதி யனையார் உணர்வுடையார் -இயற்கையறிவில்லாதவர் நூல்களை ஓதினாராயினும்ஓதாதவரேயாவர், இயற்கை யறிவுட... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
ஈயாமை
நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்;- அட்டது
அடைத்திருந் துண்டொழுகும் ஆவதின் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு.
குறிப்புரை: நட்டார்க்கும்நள்ளாதவர்க்கும் உளவரையால் அட்டது பாத்துஉண்டல் அட்டு உண்டல் - சமைத்துண்ணுதலென்பது,தமக்குள்ள பொருளளவினால் தம்மிடம்... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
ஈயாமை
எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர்;- மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
அழிந்தார் பழிகடலத் துள்.
குறிப்புரை: எத்துணையானும் இயைந்தஅளவினால் சிற்றறம் செய்தார் தலைப்படுவர் -எவ்வளவு குறைந்த தாயினும் தமக்கிசைந்த அளவினால்சிறிய ஈதலறத்தைச் செய்தார் ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
ஈயாமை
துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்றீ கலான்
வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும்.
குறிப்புரை: துய்த்துக் கழியான்துறவோர்க்கு ஒன்று ஈகலான் வைத்துக் கழியும்மடவோனை - தான் துய்த்துச் செலவழிக்காமலும்துறவடைந்த உள்ளத்தார்க்கு ஒன்று கொடாமலும்செல்வத்தை வாளா... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
ஈயாமை
கொடுத்துலுந் துய்த்தலுந் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும்.
குறிப்புரை: கொடுத்தலும்துய்த்தலும் தேற்றா இடுக்கு உடை உள்ளத்தான்பெற்ற பெருஞ்செல்வம் - தக்கார்க்கு ஈதலையும்தான் துய்த்தலையுந் தெளியாத இடுக்குப... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
ஈயாமை
எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற் றூறல்பார்த் துண்பர்
மறுமை யறியாதா ராக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
குறிப்புரை: எறிநீர்ப் பெருங்கடல்எய்தியிருந்தும் அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர் - அலை வீசுகின்றநீர்ப்பெருக்கினையுடைய பெரிய கடலைஅடுத்திருந்தும், அ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
ஈயாமை
எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை
எனதென தென்றிருப்பன் யானும்;- தனதாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்;
யானும் அதனை அது.
குறிப்புரை: எனது எனது என்று இருக்கும்ஏழை பொருளை எனது எனது என்று இருப்பன் யானும் -என்னுடையது என்னுடையது என்றுஎண்ணிக்கொண்டிருக்கும் அறிவிலானது செல்வத்தைநானும் என்னுடை... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
ஈயாமை
வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார் ;
இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல.
குறிப்புரை: வழங்காத செல்வரின்நல்கூர்ந்தார் உய்ந்தார் - பிறர்க்கொன்றுஉதவாத செல்வர்களைவிட அச்செல்வமில்லாதவறுமையாளர்களே பிழைத்துக்... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
ஈயாமை
தனதாகத் தான்கொடான் ; தாயத் தவருந்
தமதாய போழ்தே கொடாஅர் ; - தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார், தான்கடியான்
பின்னை அவர்கொடுக்கும் போழ்து.
குறிப்புரை: தனதாகத் தான் கொடான்- பொருள் தன்னுடையதாக அந்நிலையிலும் தான்பிறர்க்கு வழங்கான்; தாயத்தவரும் தமதாய போழ்துகொடார் - அவனுக்குப்பின் அவன் தாயத்... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
ஈயாமை
இரவலர் கன்றாக ஈவார்ஆ வாக
விரகிற் சுரப்பதாம் வண்மை;- விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ்.
குறிப்புரை: இரவலர் கன்றாக ஈவார்ஆவாக விரகின் சுரப்பதாம் வண்மை - இரப்போர்கன்றுகளை ஒப்பக்கொடுப்போர் ஆன்களைஒப்பப்பூரிப்புடன் குறையாதளிப்பதேகொடையெனப்படும், விரகு இன்றி, ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
ஈயாமை
ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.
குறிப்புரை: ஈட்டலும் துன்பம் -பொருள் திரட்டு தலுந் துன்பம்; ஈட்டியஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் -திரட்டிய சிறந்த பொருளைப் பாதுகாத்தல... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
இன்மைஅத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்
செத்த பிணத்திற் கடை.
குறிப்புரை: அத்து இட்ட கூறைஅரைச்சுற்றி வாழினும் பத்து எட்டு உடைமைபலருள்ளும் பாடு எய்தும் - துவர் ஊட்டிய ஆடையைஇடுப்பில் உடுத்திக்கொண்டு ஞானவாழ்வில்வாழ்ந்த... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
இன்மை
நீரினும் நுண்ணிது நெய்யென்பார், நெய்பினும்
யாரும் அறிவர் புகைநுட்பம்;- தேரின்
நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
புகற்கரிய பூழை நுழைந்து.
குறிப்புரை: நீரினும் நுண்ணிது நெய்என்பர் - நெய் நீரைப் பார்க்கினும்நுட்பமானதென்று அறிந்தோர் கூறுவர்; நெய்யினும்புகை நுட்பம் யாரும் அறிவர் - இனி, ந... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
இன்மை
கல்லோங் குயர்வரைமேற் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம்; -கொல்லைக்
கலாஅற் கிளிகடியுங் கானக நாட!
இலாஅஅர்க் கல்லை தமர்.
குறிப்புரை: கல் ஓங்கு உயர் வரைமேல்காந்தள் மலராக்கால் செல்லா செம்பொறிவண்டினம் - கற்கள் வளர்ந்துள்ள உயர்ந்தமலையின்மேல் காந்தள் முதலிய மலர்கள்மலராவிட்டால் சிவ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
இன்மை
உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டா யிரவர் தொகுபவே; -வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்.
குறிப்புரை: உடைந்துழிக்காகம்போல் உண்டாய போழ்தின் தொண்டு ஆயிரவர்தொகுப - ஒருவன் இறந்து விட்டபோது அவனுடம்பைக்காகங்கள் சூழ்ந்து மொய்த்துக்கொள்வதுபோல்ஒருவற்க... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
இன்மை
பிறந்த குலமாயும்; பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும் - கறங்கருவி
கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு.
குறிப்புரை: கறங்கு அருவி கல்மேல்கழூஉம் கணமலை நல் நாட - பாய்ந்து ஒலிக்கின்றஅருவிநீர் கற்களின் மேற்புறத்தைக் கழுவுகின்றகூட்டமான மலைகளையுடைய சிறந்த நாடனே!. இன்மை... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
இன்மை
உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளூ ரிருந்துமொன் றாற்றாதான்; உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தின னாதலே நன்று.
குறிப்புரை: உள் கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு உள்ளூர் இருந்தும் ஒன்றுஆற்றாதான் - உடம்பில் மிகுகின்ற பசித்துன்பத்தால் தான் இருக்குமிடத்தை நாடி... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
இன்மை
நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; -கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட் டார்.
குறிப்புரை: கூர்மையின் முல்லைஅலைக்கும் எயிற்றாய் - தமது கூர்மையால்முல்லையரும்புகளை வெல்லும் பற்களையுடைய பெண்ணே!,நிரப்பு என்னும் அல்லல் அடையப்பட... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
இன்மை
இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது
முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைந்நீட்டுங்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று.
குறிப்புரை: இட்டு ஆற்றுப்பட்டு ஒன்றுஇரந்தவர்க்கு ஆற்றாதுமுட்டு ஆற்றுப்பட்டு முயன்றுஉள்ளூர் வாழ்தலின் - சிறுமையாகிய வறுமை வழியி... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
இன்மை
கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக்-குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
துப்புரவு சென்றுலந்தக் கால்.
குறிப்புரை: துப்புரவு சென்றுஉலந்தக்கால் - நுகரப்படும் பொருள்கள் நீங்கிவறுமையுற்றவிடத்து, கடகம் செறிந்த தம் கைகளால் -முன்பு செல்வராயிருந்தபோது கடகம் செற... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
இன்மை
ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவாம்; -நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பின் நண்குன்ற நன்னாட!
வாழாதார்க் கில்லை தமர்.
குறிப்புரை: ஆர்த்த பொறியஅணிகிளர் வண்டினம் பூத்து ஒழி கொம்பின்மேல்செல்லா - நிறைந்த புள்ளிகளையுடைய அழகுமிக்கவண்டுக்கூட்டங்கள், பூத்தல் மாறியபூக்கொம்பு... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மானம்
[என்றது, தாழ்வு தாளாத உள்ளவியல்பு]
திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதங் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமே,
மன முடையார் மனம்.
குறிப்புரை: திரு மதுகையாகத் திறன்இலார் செய்யும் பெருமிதம் கண்டக் கடைத்தும் -செல்வம் வலிமையாகக் கயவர் செய்யும்வரம்புகடந்த செயல... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மானம்
என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பா டுரைப்பரோ தம்முடையார்; -தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.
குறிப்புரை: என்பாய் உகினும்இயல்பிலார் பின் சென்று தம் பாடு உரைப்பரோ தம்உடையார் - தன்மானமுடையோர், தாம் எலும்பாகித்தசை சிதையினும், குணமில்லாதவர் பின் ச... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மானம்
யாமாயின் எம்மில்லங் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல்-நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுசு செல்வர் தொடர்பு.
குறிப்புரை: யாமாயின் எம் இல்லம்காட்டுதும் - வறியேமாகிய யாமாயின் செல்வர்கட்குஉண்ணவும் இளைப்பாறவும் எம் இல்லத்தை இடமாகஉதவுகின்றோம். தாமாயின் காணவே கற்ப... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மானம்
இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடா
தும்மையும் நல்ல பயத்தலால், -செம்மையின்
நானம் கமழுங் கதுப்பினாய்! நன்றேகாண்
மான முடையார் மதிப்பு.
குறிப்புரை: செம்மையின் -நடுநிலையாக நோக்குமிடத்து, நானம் கமழும்கதுப்பினாய் - கத்தூரி மணக்குங் கூந்தலுடையபெண்ணே!: மானமுடையார், மதிப்பு - மானமுடையார்நடக்க... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மானம்
பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்; -சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று.
குறிப்புரை: பாவமும் ஏனைப் பழியும்பட வருவசாயினும் சான்றவர் செய்கலார் -மறுமைக்குத் தீவினையும் இம்மைக்கு மற்றைப்பழியும் உண்டாகும்படி நேர்வனதாம் இறப்பதாயினும்சான்றோர்... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மானம்
மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம்
செல்வ ரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார்.
குறிப்புரை: மல்லல் மா ஞாலத்துவாழ்பவருள் எல்லாம் - வளப்பமிக்க இப் பெரியஉலகில் உயிர்வாழ்பவரெல்லாருள்ளும், செவ்வர்எனினும் கொடாதவர் நல் கூர்ந்தார் -பொ... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மானம்
கடையெலாம் காய்பசி அஞ்சுமற் றேனை
இடையெல்லாம் இன்னாமை அஞ்சும் - புடைபரந்த
விற்புருவ வேனெடுங் கண்ணாய்! தலையெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும்.
குறிப்புரை: புடை பரந்த வில் புருவவேல் நெடு கண்ணாய் - பக்கங்களில் தசை பருத்தவில்போலும் புருவங்களையுடைய வேல்போலும் நீண்டகண்களமைந்த பெண்ணே!; கடை எலாம் காய்... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மானம்
நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்-கொல்லன்
உலையூதுந் தீயேபோல் உள்கனலுங் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்.
குறிப்புரை: நல்லர், பெரிது அளியர்,நல்கூர்ந்தார் என்று எள்ளிச் செல்வர்சிறுநோக்கு நோக்குங்கால இவர் நல்லவர், மிகவுங்கனிவுடையர், ஆயினும் வலியராயிரு... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மானம்
நச்சியார்க் கீயாமை நாணன்று, நாணாளும்
அச்சத்தால் நாணுதல் நாணன்றாம்; எச்சத்தின்
மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
சொல்லா திருப்பது நாண்.
குறிப்புரை: நச்சியார்க்கு ஈயாமைநாண் அன்று- தம்மை விரும்பி வந்தடைந்தவர்க்குஒன்று உதவமாட்டாமை நாண் அன்று; நாள் நாளும்அச்சத்தால் நாணுதல் நாண் அன்று - நாட... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
மானம்
கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும்; -இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் மழுங்க வரின்.
குறிப்புரை: கடம் மா தொலைச்சியகான் உறை வேங்கை இடம் வீழ்ந்தது உண்ணாதுஇறக்கும் - மதம் பொருந்திய யானையை அதன் வலிதொலைத்து வீழ்த்திய காட்டிலுறையும் புலி, தனக்குஇடப்பக... |
செல்வம் நிலையாமை
பொருட்பால்
இரவச்சம்
[மானக்குறைவுக்கேதுவான இரத்தலுக்கு அஞ்சியொழுகுதல்]
நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று - தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவி னவர்.
குறிப்புரை: நம்மாலே ஆவர் இநல்கூர்ந்தார் - இவ் வறுமையாளர் நம்உதவியினாலேயே வாழ்வு பெறுதற்குரியர்;எஞ்ஞான... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.