Search is not available for this dataset
செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின் பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ? விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு. குறிப்புரை: இழித்தக்க செய்துஒருவன் ஆர உணலின் பழித்தக்க செய்யான்பசித்தல் தவறோ - இழிக்கத்தக்க மானக்குறைவானசெயல்களைச் செய்து ஒருவன் வயிறார உண்ணுதலைவிடஉலகம...
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர் செல்லாரும் அல்லர் சிறுநெறி - புல்லா அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான் முகம்புகுதல் ஆற்றுமோ மேல்? குறிப்புரை: இல்லாமை கந்தா இரவுதுணிந்து ஒருவர் செல்லாரும் அல்லர் சிறுநெறி -வறுமை காரணமாக இரத்தலுக்குத் துணிந்து அச்சிறுவழியில் ஒருவர் செல்லுங் கட...
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும் உருத்த மனத்தோடு டுயர்வுள்ளி னல்லால் அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென் றெருத்திறைஞ்சி நில்லாதா மேல். குறிப்புரை: திரு தன்னை நீப்பினும்தெய்வம் செறினும் உருத்த மனத்தோடு உயர்வுஉள்ளினல்லால் - திருமகள் தன்னைத் துறந்தாலும்ஊழ் உருத்தெழுந்தாலும் த...
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம் வாழ்க்கை; -இரவினை உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு. குறிப்புரை: கரவாத திண் அன்பின்கண் அன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம்வாழ்க்கை - தமக்கொன்று ஒளியாத உறுதியானமெய்யன்பின்னையுடைய கண்போன்றஅன்பர்களிடத...
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் இன்னா இயைக இனிய ஒழிகென்று தன்னையே தானிரப்பத் தீர்வதற் - கென்னைகொல் காதல் கவற்றும் வனத்தினாற் கண்பாழ்பட் டேதி லவரை இரவு. குறிப்புரை: இன்னா இயைக இனிய ஒழிகஎன்று தன்னையே தான் இரப்பத் தீர்வதற்கு - தூயமெய்யுணர்வு உண்டாதற்கு உலகத் துன்பங்களேஏதுவாயிருத்தலின். அத்துன்பங்கள் வந்துபொருந்துக,இன...
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத் தென்று மவனே பிறக்கலான் - குன்றின் பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட! இரப்பாரை எள்ளா மகன். குறிப்புரை: குன்றின் பரப்பெலாம்பொன் ஒழுகும் பாய் அருவி நாட - மலையின் பரந்தஇடமெல்லாம் பொன் பரவுதற்கு ஏதுவான பாயும்மலையருவிகளையுடைய நாடனே!. என்றும் இவ்வுல...
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன் நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே மாயானோ மாற்றி விடின். குறிப்புரை: புறத்துத் தன் இன்மைநலிய - புறத்தே உடம்பைத் தனது வறுமை வருத்தஅதனால், அகத்துத் தன் நல்ஞானம் நீக்கிநிறீஇ-உள்ளத்தில் தனது நல்லறிவை ஒதுக்கிமனந்துணிந்து,...
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி வழிபடுதல் வல்லுத லல்லால், - பரிசழிந்து செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே பையத்தான் செல்லும் நெறி? குறிப்புரை: ஒருவர் ஒருவரைச்சார்ந்தொழுகல் ஆற்றி வழிபடுதல் வல்லுதலல்லால்- வறுமையாளரொருவர் செல்வரொருவரைச் சார்ந்துஇருந்துகொள்ளுதல் செய்து அவரைப் பி...
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் பழமைகந் தாகப் பசைந்த வழியே கிழமைதான் யாதனுஞ் செய்க: கிழமை பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத் தறாஅச் சுடுவதோர் நீ. குறிப்புரை: பழமை கந்தாகப் பசைந்தவழியே கிழமைதான் யாதானும் செய்க - பழமையாகியநட்பே பற்றுக்கோடாக நண்பர்பால் ஒன்று பெறுதற்குஉள்ளம் விரும்பியவிடத்து உரிமையால் அவ்வாறுஏதேனுஞ...
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் [அவையிலுள்ளாரின் தகுதி தெரிந்து ஒழுகுதல்] மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர் அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க் கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன் சொன்ஞானஞ் சோர விடல். குறிப்புரை: மெய்ஞ்ஞானக் கோட்டிஉறழ்வழி விட்டு - உண்மையறிவினையுடையகூட்டத்திற் கலந்து அவர் வழி நின்றொழுகு...
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந் தீப்புலவற் சேரார் செறிவுடையார்; -தீப்புலவன் கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால் தோட்புடைக் கொள்ளா எழும். குறிப்புரை: நாப் பாடம் சொல்லிநயம் உணர்வார் போல் செறிக்கும் தீப்புலவன்சேரார் செறிவுடையார் - தாம் இதற்குமுன் நெட்டுருச்செய்த...
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர், கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார், -கற்ற செலவுரைக்கும் ஆறறியார், தோற்ப தறியார், பலவுரைக்கும் மாந்தர் பலர். குறிப்புரை: சொல் தாறு கொண்டுசுனைத்தெழுதல் காமுறுவர் - சொல்லாகிய முட்கோல்கொண்டு நாத்தின வெடுத்துப் பேச முற்படுதலை மிகவிரும்பும் இயல்ப...
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால் பெற்றதாம் பேதையோர் சூத்திரம்-மற்றதனை நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன் புல்லறிவு காட்டி விடும். குறிப்புரை: கற்றதும் இன்றிக்கணக்காயர் பாடத்தால் பெற்றது ஆம் ஓர்சூத்திரமதனை - தாம் ஆழ்ந்து பயின்றதுமின்றித்தக்க கேள்வியுமின்றிப் பள்ளி ஆசிரியர்நெட...
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார் கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ-டொன்றி உரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள் சுரைவித்துப் போலுந்தம் பல். குறிப்புரை: வென்றிப் பொருட்டால்விலங்கு ஒத்து மெய்கொள்ளார் கன்றிக்கறுத்தெழுந்து காய்வாரோடு - போலி வெற்றியின்பொருட்டுப் பகுத்தறிவின்றிவிலங...
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் பாடாமே ஓதிப் பயன்றெரிதல் தேற்றாத மூடர் முனிதக்க சொல்லுங்கால்-கேடருஞ்சீர்ச் சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை ஈன்றாட் கிறப்பப் பரிந்து. குறிப்புரை: பாடமே ஓதிப்பயன்தெரிதல் தேற்றாத மூடர் மனிதக்க சொல்லுங்கால் -செய்யுள்களை நெட்டுருச் செய்து சொல்லிக்கொண்டுஅதன் பொருள் நுட்பங்கண்டு இன்ப...
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக் கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; மற்றம் முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும் அறிதற் கரிய பொருள். குறிப்புரை: பெறுவது கொள்பவர்தோள்போல் நெறிப்பட்டுக் கற்பவர்க்கெல்லாம்நூல் எளிய-கொடுப்பவரை மனத்துட் கொள்ளாமல்தாம் பெறுகின்ற விலைப் பொருளையே கருத்தா...
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார் உய்த்தக மெல்லா நிறைப்பினும் - மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே, பொருடெரிந்து தேற்றும் புலவரும் வேறு. குறிப்புரை: புத்தகமே சாலத்தொகுத்தும் பொருள் தெரியார் - புத்தகங்களைமிகுதியாகத் தொகுத்து வைத்தும் பலர் அவற்றின்பொருள் தெரியாதவராவர்: உய்த்து அ...
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந் நான்கின் கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் - பழிப்பில் நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட! உரையாமோ நூலிற்கு நன்கு? குறிப்புரை: பொழிப்பு அகலம்நுட்பம் எச்சம் இந்நான்கின் நூல் கொழித்துஅகலம் காட்டாதார் சொற்கள்-பொழிப்புரைஅகலவுரை நுட்பவுரை எச்சவுரை யென்னும் இந்ந...
செல்வம் நிலையாமை பொருட்பால் அவையறிதல் இற்பிறப் பில்லா ரெனைத்துநூல் கற்பினும் சொற்பிறரைக் காக்குங் கருவியரோ? -இற்பிறந்த நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார் புல்லறிவு தாமறிவ தில். குறிப்புரை: இற்பிறப்பு இல்லார்எனைத்து நூல் கற்பினும் சொல் பிறரைக் காக்கும்கருவியரோ-உயர்ந்த குடிப்பிறப் பில்லாதவர்எவ்வளவு நூல்கள் பயின்றாலும் ஏன...
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை [தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.] அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர் புலவர்; -பொருளல்லா ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை மூழை சுவையுணரா தாங்கு. குறிப்புரை: அருளின் அறம் உரைக்கும்அன்புடையார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர்...
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால் செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்; கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின் செவ்விய கொளல்தேற்றா தாங்கு. குறிப்புரை: கவ்வித் தோல்தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின்செவ்விகொளல் தேற்றாதாங்கு - தொரைக் கவ்வித்தின்னும் புலையருடைய...
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை இமைக்கும் அளவிற்றம் இன்னுயிர்போம் மார்க்கம் எனைத்தானும் தாங்கண் டிருந்தும் -தினைத்துணையும் நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள் பொன்றிலென் பொன்றாக்கா லென்? குறிப்புரை: இமைக்குமளவில் தம்இன்னுயிர் போம் மார்க்கம் எனைத்தானும் தாம்கண்டிருந்தும் -கண்ணிமைக்கும் அத்துணைச் சிறுபொழுதில் தமது...
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால், பலர்மன்னுந் தூற்றும் பழியால், -பலருள்ளும் கண்டரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன் தண்டித் தனிப்பகை கோள். குறிப்புரை: உள நாள் சில, உயிர்க்குஏமம் இன்று, பலர் தூற்றும் பழி -இவ்வுலகில் உயிர்வாழ்ந்திருக்கும் நாட்கள் சில, அச் சிலநாட்களிலும் உயிர்க்குப் பா...
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி வைதான் ஒருவன் ஒருவனை; -வைய வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான் வியத்தக்கான் வாழும் எனின். குறிப்புரை: எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்று எள்ளி ஒருவன் ஒருவனைவைதான்-ஒருவன் சென்று கலந்திருந்த தக்கோர்அவையின் முன் ஒருவன் போய் அவனை இகழ்ந்துதிட்டின...
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை ஊக்கி அதன்கண் முயலாதான் - நூக்கிப் புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள் தொழுத்தையாற் கூறப் படும். குறிப்புரை: மூப்பு மேல் வாராமைமுன்னே அறவினையை ஊக்கி அதன்கண் முயலாதான் -கிழத்தனம் மேல் எழுந்து தோன்றாததற்கு முன்உலகில் அறச்செயலைத் தொடங்கி அதன்...
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார் ஏமாஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார்-தாமயங்கி ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவி னார். குறிப்புரை: புல்லறிவினார்தாமேயும் இன்புறார் தக்கார்க்கும் நன்றாற்றார்ஏமம் சார் நல்நெறியும் சேர்கலார்தாழ்ந்தஅறிவினையுடையோர் தாமாகி...
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை சிறுகாலை யேதமக்குச்செல்வுழி வல்சி இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப் பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும் பொன்னும் புளிவிளங்கா யாம். குறிப்புரை: சிறுகாலையே தமக்குச்செல்வுழி வல்சி இறுக இறுகத் தோட் கோப்புக்கொள்ளார் - இளம் பருவத்திலேயே தமதுசெல்லுமிடமாகிய மறுமை...
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும் மறுமை மனத்தாரே யாகி, - மறுமையை ஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச் சிந்தியார் சிற்றறிவி னார். குறிப்புரை: வெறுமையிடத்தும் விழுப்பிணிப் போழ்தும் மறுமை மனத்தாரேயாகி - கையிற்பொருளில்லாத வறுமைக் காலத்தும் மிக்கநோயுண்டான நேரத்தும் மறுமைக்குரியஅற...
செல்வம் நிலையாமை பொருட்பால் புல்லறிவாண்மை என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார் கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை, - அன்னோ அளவிறந்த காதற்றம் ஆருயி ரன்னார்க் கொளஇழைக்கும் கூற்றமுங் கண்டு. குறிப்புரை: அன்னோ அளவிறந்தகாதல் தம் ஆருயிரன்னார்க் கொள இழைக்கும்கூற்றமும் கண்டு - ஐயோ, தம்பால் அளவு கடந்தஅன்பினையுடைய தம் ஆருயிரன்ன உற...
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை [யாதும் அறியாமை என்பதுணர்த்தும்] கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே, கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு. குறிப்புரை: கொலை வல் பெரு கூற்றம்கோள் பார்ப்ப ஈண்டை வலையகத்துச்செம்மாப்பார் மாண்பு - கொல்லுந் தொழிலில்வல்லமையுட...
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன் ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால் இற்செய் குறைவினை நீக்கி அறவினை மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு. குறிப்புரை: இல்செய் குறைவினைநீக்கி அறவினை மற்றறிவாம் என்றிருப்பார்மாண்பு- குடும்பத்துக்குச் செய்யவேண்டிய குறைகளைச்செய்து தீர்த்து அறச்செயல்களைப் பின்புகர...
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை குலந்தவங் கல்வி குடிமைமூப் பைந்தும் விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற மையறு தொல்சீர் உலகம் அறியாமை நெய்யிலாப் பாற்சோற்றின் நேர். குறிப்புரை: குலம் தவம் கல்வி குடிமைமூப்பு ஐந்தும் விலங்காமல் எய்தியக்கண்ணும் -நல்லிணக்கம் தவவொழுக்கம் கல்வியறிவு குடிவளம்ஆண்டில் மூத்தோராதல் என்னும் ஐ...
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை கன்னனி நல்ல கடையாய மாக்களின்; சொன்னனி தாமுணரா வாயினும் - இன்னினியே நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென் றுற்றவர்க்குத் தாமுதவ லான். குறிப்புரை: கல் நனி நல்ல கடையாயமாக்களின் - மக்களிற் கடைப்பட்டவரானபேதையரைவிடக் கற்பாறைகள் மிக நல்லனவாம் தாம் சொல் நனி உணராவாயினும்உற்றவர்க்கு இன்னினியே ந...
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக் கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால் கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு நாத்தின்னும் நல்ல சுனைத்து. குறிப்புரை: பெறுவதொன்று இன்றியும்பெற்றானே போலக் கறுவுகொண்டு - தனது சினத்துக்குஏதுவாகப் பெறுங் காரணம் ஒன்று இல்லாதிருந்தும்அக் காரணம் பெற்றவனேபோல...
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை எங்கண் வணக்குதும் என்பவர் - புன்கேண்மை நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப! கற்கிள்ளிக் கையிழந் தற்று. குறிப்புரை: நல் தளிர்ப் புன்னைமலரும் கடல் சேர்ப்ப - அழகிய தளிர்களையுடையபுன்னைமரங்கள் மலர்களைப் பூக்கின்றகடற்கரையாய்!, தங்கண் மரபு இல்லார் பின் செ...
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின் போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதுங் கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி விடாஅர் உலகத் தவர். குறிப்புரை: ஆகாது எனினும் அகத்து நெய் உண்டாகில் போகாது எறும்பு புறம் சுற்றும் - தமக்கு உண்ண வாய்க்காதெனினும் குடத்தினுள் நெய் இருக்குமாகில் எறும்புகள் போகாமல் அக...
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை நல்லவை நாடொறும் எய்தார், அறஞ்செய்யார் இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார், - எல்லாம் இனியார்தோள் சேரார், இசைபட வாழார், முனியார்கொல் தாம்வாழும் நாள். குறிப்புரை: நல்அவை நாடோறும் எய்தார், அறம் செய்யார், இல்லாதார்க்கு யாதொன்றும் ஈகலார், எல்லாம் இனியார் தோள்சேரார் இசைபட வாழார் - உயர்ந்தோர் அவ...
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர் விழைந்திலேம் என்றிருக்குங் கேண்மை, - தழங்குகுரல் பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே ஆய்நலம் இல்லாதார் மாட்டு. குறிப்புரை: விழைந்து ஒருவர் தம்மைவியப்ப ஒருவர் விழைந்திலேமென்றிருக்கும் ஆய்நலமில்லாதார் மாட்டுக்கேண்மை - ஒருவர் தம்மைவிரும்பி மதித்து அளவள...
செல்வம் நிலையாமை பொருட்பால் பேதைமை கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின் மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தனென் றெள்ளப் படும். குறிப்புரை: கற்றனவும் கண் அகன்றசாயலும் இல் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப்பாடு எய்தும் - தான் கற்ற கல்விகளும், காட்சிபரந்த தன் சாயலும், தனது உ...
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை [கீழ்மக்களின் தன்மை யுணர்த்திற்று.] கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும் குப்பை கிளைப்போவாக் கோழிபோல், - மிக்க கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன் மனம்புரிந்த வாறே மிகும். குறிப்புரை: கப்பி கடவதா காலை தன்வாய்ப்பெயினும் குப்பை கிளைப்பு ஓவாக்கோழிபோல் - கடமையாக நாடோறும்நொய்யர...
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல் தாழாது போவாம் எனஉரைப்பின் - கீழ்தான் உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி மறங்குமாம் மற்றொன் றுரைத்து. குறிப்புரை: காழ் ஆய கொண்டு கசடுஅற்றார் தம் சாரல் தாழாது போவாம் எனஉரைப்பின் - உறுதியாகிய மெய்ந்நூலுணர்வு கொண்டுவினை நீங்கிய மேலோர் பக்கல் நாம் காலம்தா...
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா தொருநடைய ராகுவர் சான்றோர்; - பெருநடை பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட! வற்றாம் ஒருநடை கீழ். குறிப்புரை: பெரு நடை தாம் பெறினும்பெற்றிபிழையாது ஒரு நடையராகுவர் சான்றோர் -உலகிற் பெருமித நிலையைத் தாம் பெற்றாலும் தம்பெருந்தன்மையாகிய இயல்பு வழுவாது என்று...
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால் பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் ;- பனையனைத் தென்றுஞ் செயினும் இலங்கருவி நன்னாட. நன்றில நன்றறியார் மாட்டு. குறிப்புரை: தினையனைத்தேயாயினும்செய்த நன்று உண்டால் பனையனைத்தா உள்ளுவர்சான்றோர் - தினையளவினதேயாயினும் செய்த உதவிமுன் இருக்குமானால் அதனைப் பனையளவ...
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர் எச்சிற் கிமையாது பார்த்திருக்கும்; - அச்சீர் பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யுங் கருமங்கள் வேறு படும். குறிப்புரை: பொன் கலத்து ஊட்டிப்புறந்தரினும் நாய் பிறர் எச்சிற்கு இமையாதுபார்த்திருக்கும் - பொன்னாற் செய்தஉண்கலத்தினால் உண்பித்துப் பாதுகா...
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர் எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும் முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை இந்திரனா எண்ணி விடும். குறிப்புரை: சக்கரச் செல்வம்பெறினும் விழுமியோர் எக்காலும் சொல்லார்மிகுதிச் சொல் - ஆட்சிச் செல்வம் பெற்றாலும்மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந...
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச் செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம்; எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும். குறிப்புரை: மை தீர்பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்செய்ததெனினும் செருப்புத் தன் காற்கேயாம் -குற்றந் தீர்ந்த கிளிச்சிறை என்னும் பசியபொற்றகட்டின்...
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம் இடுக்கண் பிறர்மாட் டுவக்கும், - அடுத்தடுத்து வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட! ஏகுமாம் எள்ளுமாம் கீழ். குறிப்புரை: விறல் மலை நல் நாட -ஆற்றல் வாய்ந்த மலைகளையுடைய சிறந்த நாடனே!,கீழ் - கீழ்மகன், கடுக்கெனச் சொல் வற்று -கடுமையாகப் பேசுதல் வல்லான்:...
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை பழைய ரிவரென்று பன்னாட்பின் நிற்பின் உழையினிய ராகுவர் சான்றோர்; - விழையாதே கள்ளுயிர்க்கும் நெய்தற் கனைகடல் தண்சேர்ப்ப; எள்ளுவர் கீழா யவர். குறிப்புரை: கள் உயிர்க்கும்நெய்தல் கனை கடல் தண் சேர்ப்ப - தேன்சொரியும்நெய்தல் மலர்களையுடைய ஒலிக்கின்ற கடலின்குளிர்ந்த கரையை யுடையவனே!, பின் நிற்பின...
செல்வம் நிலையாமை பொருட்பால் கீழ்மை கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றுந் தீற்றினும் வையம்பூண் கல்லா சிறுகுண்டை; - ஐயகேள், எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும். குறிப்புரை: கொய் புல்கொடுத்துக் குறைத்து என்றும் தீற்றினும் வையம்பூண்கல்லா சிறு குண்டை - கொய்தற்குரிய பசும்புல்லைஅறுத்துக்கொடுத்து நாடோறும் ...
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை [மெலிந்த உணர்வினாரது இயல்புணர்த்திற்று.] ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங் காத்தோம்பித் தம்மை அடங்குப; - மூத்தொறூஉம் தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல் போத்தறார் புல்லறிவி னார். குறிப்புரை: ஆர்த்த அறிவினர் ஆண்டுஇளையராயினும் காத்து ஓம்பித் தம்மை அடக்குப -உறுதிமக்க மெய்யறிவினையுடையார் ...
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும் வழும்பறுக்க கில்லாவாந் தேரை: - வழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார் தேர்கிற்கும் பெற்றி அரிது. குறிப்புரை: செழும் பெரும்பொய்கையுள் வாழினும் என்றும் வழும்புஅறுக்ககில்லாவாம் தேரை-நீர் நிறைந்த பெரியகுளத்தின்கண் உயிர் வாழ்ந்தாலும் ...
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை கணமலை நன்னாட! கண்ணின் றொருவர் குணனேயுங் கூறற் கரிதால், குணனழுங்கக் குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட் கெற்றா லியன்றதோ நா. குறிப்புரை: கண மலைநல் நாட -கூட்டமான மலைகளையுடைய உயர்ந்த நாடனே!. கண் இன்றுஒருவர் குணனேயும் கூறற்கு அரிது - புறத்தில் ஒருவரதுநல்லியல்பினையும் பேசுதற்குஅருமையாயிருக்க...
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை கோடேந் தகலல்குற் பெண்டிர்தம் பெண்ணீர்மை சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப் புதுப் பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி மதித்திறப்பர் மற்றை யவர். குறிப்புரை: கோடு ஏந்து அகல்அல்குற் பெண்டிர்தம் பெண் நீர்மை சேடியர்போலச்செயல் தேற்றார்-பக்கம் உயர்ந்து அகன்றஅல்குலையுடைய நல்லிலக்கணம் அமைந்த...
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை தளிர்மேலே நிற்பினுந் தட்டமாற் செல்லா உளிநீரார் மாதோ கயவர்; - அளிநீராக் கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவே இன்னாங்கு செய்வார்ப் பெறின். குறிப்புரை: தளிர்மேலே நிற்பினும்தட்டாமற் செல்லா உளிநீரார் கயவர் -இளந்தளிரின்மேல் நின்றாலும் பிறர்தட்டினாலன்றி அதனுள் இறங்காத உளியின்இயல்பினையுடையவர...
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர் செய்தநன் றுள்ளுவர் சான்றோர்கயந்தன்னை வைததை உள்ளி விடும். குறிப்புரை: மலைநலம் உள்ளும் குறவன்- குறவன் தனக்கு வளந்தந்த மலையினது நன்மையைநினைந்து பாராட்டிக்கொண்டிருப்பான்; பயந்தவிளைநிலம் உள்ளும் உழவன் - உழவன் தனக்குவிளையுள் ...
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்: - கயவர்க் கெழுநூறு நன்றிசெய் தொன்றுதீ தாயின் எழுநூறுந் தீதாய் விடும். குறிப்புரை: ஒரு நன்றி செய்தவர்க்குஒன்றி எழுந்த பிழை நூறுஞ் சான்றோர் பொறுப்பர் -தமக்கு ஒரு நன்மை செய்தவர்க்குச் சான்றோர்அவரால் பின்பு தொடர்ந்து உண்டான ந...
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள்; - கோட்டை வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய்; பன்றி செயிர்வேழ மாகுத லின்று. குறிப்புரை: ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள் - பொருளில்லாமை முதலியவற்றால் தளர்வுண்டான காலத்திலும் உயர...
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது நின்றாதும் என்று நினைத்திருந் - தொன்றி உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி மரையிலையின் மாய்ந்தார் பலர். குறிப்புரை: இன்று ஆதும் இந்நிலையேஆதும் இனிச்சிறிது நின்று ஆதும் என்றுநினைத்திருந்து ஒன்றி உரையின் மகிழ்ந்து - இன்றுசெல்வராவோம், இப்பொழுதே செல்வராவ...
செல்வம் நிலையாமை பொருட்பால் கயமை நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும் ஈரங் கிடையகத் தில்லாகும்; - ஓரும் நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும் அறைப்பெருங்க லன்னா ருடைத்து. குறிப்புரை: நீருள் பிறந்து நிறம்பசியதாயினும் ஈரம் கிடையகத்து இல்லாகும் -நீரினுள் தோன்றி மேலே நிறம்பசுமையுடையதாயிருந்தாலும் நெட்டியின் உள்ளே ஈரம்இல்லை...
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி [பலவகைப்பட்ட ஒழுகலாறுகளை உணர்த்துவது] மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய் இழைவிளக்கு நின்றமைப்பின் என்னாம்? -விழைதக்க மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம் காண்டற் கரியதோர் காடு. குறிப்புரை: மழை திளைக்கும்மாடமாய் மாண்பு அமைந்த காப்பாய் இழை விளங்குநின்று இமைப்பின் என்னாம் - மேகங்கள் தவ...
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும் இழுக்கினைத் தாம்பெறுவ ராயின், இழுக்கெனைத்துஞ் செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார் கையுறாப் பாணி பெரிது. குறிப்புரை: வழுக்கு எனைத்தும்இல்லாத வாள்வாய்க்கிடந்தும் இழுக்கினைத் தாம்பெறுவராயின் - சோர்வு சிறிதுமில்லாத வாளின்காவலில் இருந்தும் ம...
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய்; - இம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை. குறிப்புரை: எறி என்றுஎதிர்நிற்பாள் கூற்றம் - தன் கணவற்குச் சினத்தைமூட்டி ‘அடி' என்று எதிரில் அடங்காது நிற்கும்மனைவி அவனுக்குக் கூற்றுவனாவாள்...
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி கடியெனக் கேட்டுங் கடியான், வெடிபட ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான், - பேர்த்துமோர் இற்கொண் டினிதிரூஉம் ஏமுறுதல் என்பவே, கற்கொண் டெறியுந் தவறு. குறிப்புரை: கடி எனக் கேட்டும்கடியான் - இனி மணவாழ்க்கையை முனிந்துவிடு என்றுதக்கோ ரறிவுரைகள் கேட்டும் முனியானாய், வெடிபடஆர்ப்பது கேட்டும் அது தெளி...
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க் கிடையே இனியார்கட் டங்கல், - கடையே புணராதென் றெண்ணிப் பொருள்நசையால் தம்மை உணரார்பின் சென்று நிலை. குறிப்புரை: தலையே தவம் முயன்றுவாழ்தல் ஒருவர்க்கு - மக்கட்பிறவியில் வந்தஒருவர்க்கு, தம் வாழ்க்கையில்தவமுயற்சியுடையராய் வாழ்தல் தலையானதாகும்;இடையே இனியார்க...
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள் இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும் முனிவினாற் கண்பா டிலர். குறிப்புரை: கல்லாக் கழிப்பர்தலையாயார் - மக்களில் உயர்ந்தோர்,நற்கருத்துக்களை ஆழ்ந்து அறிந்து தெளிவு பெறுதலைமேற்கொண்டு அம்முறையில் தம் வாழ்நாட்களைக்கழிப்பர்;...
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச் செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல் வயனிறையக் காய்க்கும் வளவய லூர! மகனறிவு தந்தை யறிவு. குறிப்புரை: செந்நெல்லாலாயசெழுமுளை மற்றும் அச் செந்நெல்லேயாகி விளைதலால்- சாலி என்னும் உயர்ந்த செந்நெல்லின்விதையினால் உண்டான செழுவியமுளை பின்னும் அச்செந்நெற் பயிராகவ...
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப் புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக் கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால்போற் கீழ்மேலாய் நிற்கும் உலகு. குறிப்புரை: உடைப்பெருஞ் செல்வரும்சான்றோரும் கெட்டுப் புடைப்பெண்டிர் மக்களும்கீழும் பெருகி தமது பொருளைப் பலர்க்கும் வழங்கும்அன்புரிமையு...
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய் தணியாத உள்ளம் உடையார், - மணிவரன்றி வீழும் அருவி விறன்மலை நன்னாட! வாழ்வின் வரைபாய்தல் நன்று. குறிப்புரை: மணி வரன்றி வீழும்அருவி விறல் மலை நல் நாட - மணிகளை வாரிக்கொண்டுவீழ்கின்ற அருவிகளையுடைய வென்றிமிக்கமலைகளமைந்த சிறந்த நாடனே!. இனியார் தம்நெஞ்சத...
செல்வம் நிலையாமை பொருட்பால் பன்னெறி புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும் விதுப்பற நாடின்வே றல்ல; - புதுப்புனலும் மாரி அறவே அறுமே, அவரன்பும் வாரி அறவே அறும். குறிப்புரை: புதுப் புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும் விதுப்பு அற நாடின் வேறுஅல்ல - புதுநீர்ப் பெருக்கும் அழகிய தோடணிந்தவேசையரின் றொடர்பும் விரை தலின்றிஆ...
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் [பொருள் கொடுப்பார் பலர்க்கும் உரிய பொதுப் பொருளாயிருக்கும் வரைவில் மகளிரின் இயல்பு.] விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும் துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும் நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும் கையற்ற கண்ணே அறும். குறிப்புரை: விளக்கொளியும்வேசையர் நட்பும் இரண்டும் துளக்குஅற நாடின்...
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் அங்கோட் டகலல்குல் ஆயிழையாள் நம்மோடு செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின மேற்காணம் இன்மையான் மேவா தொழிதாளே காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து. குறிப்புரை: அம் கோடு அகல் அல்குல்ஆய் இழையாள் நம்மோடு செங்கோடுபாய்துமேஎன்றாள் மன் - அழகிய பக்கங்கள் உயர்ந்த அகன்றஅல்குலையுடைய ஆராய்ந்தெ...
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ் செங்கண்மா லாயினும் ஆகமன், - தங்கைக் கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார் விடுப்பர்தங் கையாற் றொழுது. குறிப்புரை: அங்கண் விசும்பின்அமரர் தொழப்படும் செங்கண்மால் ஆயினும் ஆக -அழகிய இடமகன்ற விண்ணுலகத்தின் தேவர்களால்வணங்கப்படுகின்ற சிவந்த தாமரைக் கண்...
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் ஆணமில் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக் காணமி லாதார் கடுவனையர்; - காணவே செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார் அக்காரம் அன்னார் அவர்க்கு. குறிப்புரை: ஆணம்இல் நெஞ்சத்துஅணிநீலக் கண்ணார்க்குக் காணம் இலாதார் கடுஅனையர் - அன்பில்லாத உள்ளமும் அழகிய நீலமலர்போன்ற கண்களுமுடைய பொதுமகளிர்க்...
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார் விலங்கன்ன வெள்ளறிவி னார். குறிப்புரை: பாம்பிற்கு ஒரு தலைகாட்டி ஒரு தலைதேம் படு தெள் கயத்து மீன் காட்டும்மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வார் -இன்சுவை மிக்க தெளிந்த நீர்ப்ப...
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல் நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த பொற்றொடியும் போர்த்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே நிற்றியோ போதியோ நீ. குறிப்புரை: பொத்த நூல் கல்லும்புணர் பிரியா அன்றிலும்போல் நித்தலும் நம்மைப்பிரியலம் என்று உரைத்த பொன் தொடியும் போர்த்தகர்க் கோடு ஆயின...
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு சேமாபோல் குப்புறூஉஞ் சில்லைக்கண் அன்பினை ஏமாந் தெமதென் றிருந்தார் பெறுபவே தாமாம் பலரால் நகை. குறிப்புரை: ஆமாபோல் நக்கி அவர்கைப்பொருள் கொண்டு சேமாபோல் குப்புறூஉம்சில்லைக்கண் அன்பினை ஏமாந்து எமதுஎன்றிருந்தார் - முதலிற் காட்டாவைப் போல்மெத்தென ஊற்றி...
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் ஏமாந்த போழ்தின் இனியார்போன் றின்னாராய்த் தாமார்ந்த போதே தகர்க்கோடாம் - மானோக்கின் தந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே, செந்நெறிச் சேர்துமென் பார். குறிப்புரை: ஏமாந்த போழ்தின்இனியார்போன்று இன்னராய்த் தாம் ஆழ்ந்தபோதேதகர்க்கோடு ஆம் - காமுகர் தம்பால்மயங்கியிருந்த காலத்தில் புறத்தே அவர்க்...
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் ஊறுசெய் நெஞ்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார் தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி எமரென்று கொள்வாருங் கொள்பவே யார்க்குந் தமரல்லர் தம்உடம்பி னார். குறிப்புரை: ஊறு செய் நெஞ்சம் தம்உள்ளடக்கி ஒள் நுதலார் தேற மொழிந்த மொழிகேட்டு - பிறர்பாற் பொருள் பறித்துக்கொள்ளுதலாகிய தீமையைச் செய்யுந் தமது நினை...
செல்வம் நிலையாமை பொருட்பால் பொதுமகளிர் உள்ளம் ஒருவன் உழையாத ஒண்ணுதலார் கள்ளத்தாற் செய்யுங் கருத்தெல்லாந் - தெள்ளி அறிந்த விடத்தும் அறியாராம் பாவம் செறிந்த உடம்பி னவர். குறிப்புரை: உள்ளம் ஒருவன்உழையதா-தமது நெஞ்சம் வேறொருவனிடத்ததாக, ஒள்நுதலார் கள்ளத்தால் செய்யுங் கருத்தெல்லாம் -ஒளிபொருந்திய நெற்றியையுடைய பொருட்பெண்டிர்வஞ...
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் [கணவன்பால் ஆழ்ந்த அன்புணர்வுடைய இல்லற நிகழ்த்தும் மகளிரது இயல்பு.] அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் - விரும்பிப் பெறுநசையாற் பின்னிற்பா ரின்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத் துணை. குறிப்புரை: அரும்பெறல் கற்பின்அயிராணி அன்ன பெரும் பெயர்ப் பெண்டிர்எனினு...
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதுங் கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும் கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி மாதர் மனைமாட்சி யாள். குறிப்புரை: குடம் நீர் அட்டுஉண்ணும் இடுக்கண் பொழுதும் கடல் நீர் அற உண்ணும்கேளிர் வரினும் - குடத்திலுள்ள நீரையேகாய்ச்சிப் பருகிப் பசியாறும் இன்னாக்காலத்தும் ...
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும் மேலாறு மேலுறை சோரினும் - மேலாய வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே இல். குறிப்புரை: நால் ஆறும் ஆறாய், நனிசிறிதாய், எப்புறனும் மேல் ஆறு மேல்உறை சோரினும்- வீடு நாலாபக்கமும் இடிந்து வழியுடையதாய்; மிகவுஞ்சிறியதாய், எந்தப...
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள், உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், - உட்கி இடனறிந் தூடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண். குறிப்புரை: கட்கு இனியாள் காதலன்காதல் வகை புனைவாள் - பார்வைக்கு இனியஇயற்கையழகுடைய வளாய்த் தன் காதலன் விருப்பப்படிசெயற்கைக் கோலங்கள் செய்து கொள்வாளும...
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் எஞ்ஞான்றும் எங்கணவர் எந்தோள்மேற் சேர்ந்தெழினும் அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும் என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையாற் பன்மார்பு சேர்ந்தொழுகு வார். குறிப்புரை: எஞ்ஞான்றும் எம் கணவர்எம் தோள் மேல் சேர்ந்தெழினும் அஞ்ஞான்றுகண்டேம்போல் நாணுதும் - எம் கணவர் எந்நாளும்எ...
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால் வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; -தெள்ளிய ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ நாணுடையாள் பெற்ற நலம். குறிப்புரை: உள்ளத்து உணர்வுடையான்ஓதிய நூல் அற்று - உள்ளத்தில் இயற்கைநுண்ணுணர்வுடையதா னொருவன் கற்ற கல்வியறிவையொத்த தாயும், வள்ளன்மை பூண்டான்கண்ஒ...
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் கருஞ்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன்; -ஒருங்கொவ்வா நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது என்னையுந் தோய வரும். குறிப்புரை: கருங்கொள்ளும்செங்கொள்ளும் தூணிப்பதக்கு என்று ஒருங்கு ஒப்பக்கொண்டானாம் ஊரன் - மருதநிலத்து ஊரில்இருந்துகொண்டே அவ்வூரா...
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் கொடியவை கூறாதி பாண! நீ கூறின் அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின் இடக்கண் அனையம்யாம் ஊரற் கதனால் வலக்கண் அனையார்க் குரை. குறிப்புரை: கொடியவை கூறாதி பாண -பாண! கேட்க இன்னாதனவான தலைவனைப் பற்றியநயவுரைகளை எம் மிடங் கூறாதே; நீ கூறின் - நீகூறுவதானால், துடியின் இடக்கண் அனையம் யாம் ...
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் சாய்ப்பறிக்க நீர்திகழுந் தண்வய லூரன்மீது ஈப்பறக்க நொந்தேனும் யானேமன், - தீப்பறக்கத் தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம் நோக்கி யிருந்தேனும் யான். குறிப்புரை: சாய் பறிக்க நீர்திகழும் தண்வயல் ஊரன்மீது ஈப் பறக்கநொந்தேனும் யானேமன் - கோரைகளைப்பறித்துவிடுதலால் நீர் நன்கு விளங்கித்தெரி...
செல்வம் நிலையாமை பொருட்பால் கற்புடை மகளிர் அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின் கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால் இடைக்கண் அனையார்க் குரை. குறிப்புரை: அரும்பு அவிழ் தாரினான்எம் அருளும் என்று பெரும்பொய் உரையாதி பாண -அரும்புகள் போதாகி மலரும் மாலையை யணிந்த எம்தலைவன் எமக்குத் தலையளி செய்ய...
செல்வம் நிலையாமை காமத்துப்பால் இது காமவின்பத்தின் இயல்பை யுணர்த்தும் பகுதி. அறம்பொருள் இன்பமென்னும் வழக்கால், காமம் இன்பமென்றே கூறப்படுதல் விளங்கும். விளங்கவே, வீடென்பது இன்பத்தின் வேறென்றுணரப்படும். அஃது, இன்ப துன்ப மற்ற அமைதி நிலையென்று கொள்க. அந்நிலையையெய்துங்கால் அஃது இவ்வின்பத்தினுஞ் சிறப்புடையதாய் விளங்கலின், அறம...
நான்மணிக்கடிகை மூலமும் உரையும் கடவுள் வாழ்த்து மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும் கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும் முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின் எதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும் பூவைப் புதுமலர் ஒக்கும் நிறம் மதி - திங்கள், மன்னும் மாயவன் - அழிதலில்லாத திருமாலினது, வாள் முகம் ஒக்கும் - ஒளியையுடைய திருமுகத்தை ஒத்திரு...
படியை மடியகத் திட்டான் அடியினால் முக்காற் கடந்தான் முழுநிலம் - அக்காலத்து ஆப்பனிதாங்கிய குன்றெடுத்தான் சோவின் அருமை யழித்த மகன். பொருள்: படியை - உலகத்தை, மடியகத்து இட்டான் - வயிற்றில் வைத்தான், அடியினால் - தன் திருவடிகளால், முழு நிலம் - உலகங்கள் முழுமையும், முக்கால் கடந்தான் - மூன்று முறைகளில் தாவியளந்தான்; அக்காலத்து ...
எள்ளற்க என்றும் எளியாரென்றென்பெறினும் கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா- உள்சுடினும் சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க கூறல் லவற்றை விரைந்து. பொருள்: என்றும் - எக்காலத்தும், எளியார் என்று - பொருள்வலிகளாற் குறைந்தவரென்று, எள்ளற்க - பிறரை இகழாதொழிக; என்பெறினும் - மிகச் சிறந்த தொன்றைப் பெறுவதனாலும், கொள்ளார் கை - கொள்ளத் தகாதவ...
பறைபட வாழா அசுணமா உள்ளங் குறைபட வாழார் உரவோர்- நிறைவனத்து நெற்பட்ட கண்ணே வெதிர்சாந் தனக்கொவ்வாச் சொற்பட வாழாதாஞ்சால்பு. பொருள்: அசுணமா - கேகயப் பறவைகள், பறை பட வாழா - பறையின் ஓசை தஞ் செவியிற்பட்டால் உயிர்வாழ மாட்டா; உரவோர் - அறிவுடையோர், உள்ளம் குறைபட வாழார் - தமது பெருநிலை குறைபட்டால் உயிர்தாங்கமாட்டார், நிறை வனத்து -...
மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து எறிய பின்னறிப மாநலம் மாசறச் சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப கேளிரான் ஆய பயன். பொருள்: மணி நலம் - மாணிக்கம் முதலான மணிகளின் நல்லியல்பை, மண்ணி அறிப - கழுவியறிவார்கள்; மா நலம் - குதிரையின் நல்லியல்பை, பண் அமைத்து - அதன்மேற் சேணமமைத்து, ஏறிய பின் அறிப - ஏறிய பின் அறிவார்கள்; பொன்னின் ந...
கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின் ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள் பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார் நல்லாள் பிறக்குங் குடி. பொருள்: அகில் - அகிற்கட்டை, கள்ளி வயிற்றின் பிறக்கும் - கள்ளிமரத்தின் நடுவில் உண்டாகும்; ஒள் அரிதாரம் - ஒளியுள்ள அரிதாரம், மான் வயிற்றின் பிறக்கும் - மான் வயிற்றில் உண்டாகும்; ...
கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி சொல்லிற் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம் பொருளிற் பிறந்து விடும். பொருள்: கதிர்மணி - ஒளியுள்ள மணிகள், கல்லில் பிறக்கும் - மலையில் உண்டாகும்; உயர் மதம் - மிக்க களிப்பு, காதலி சொல்லில் பிறக்கும் - காதலியினது இன்சொல்லினால் தோன்றும்; அறநெறி - அறவழிகள், மெல் ...
திருவொக்குந் தீதில் ஒழுக்கம் பெரிய அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக் கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும் போற்றாதார் முன்னர்ச் செலவு. பொருள்: தீது இல் ஒழுக்கம் - தீமை கலவாத நல்லொழுக்கம், திரு ஒக்கும் - செல்வத்தை யொக்கும்; ஆற்றின் ஒழுகல் - முறைப்படி ஒழுகுதல், பெரிய அறன் ஒக்கும் - சிறந்த அறச் செய்கையோடு ஒக்கும்; பிற...
கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு உள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள் செய்வமென் பார்க்குந் துயிலில்லை அப்பொருள் காப்பார்க்கும் இல்லை துயில். பொருள்: கள்வம் என்பார்க்கும் - திருடுவமென்று சோர்வு நேரம் பார்ப்பார்க்கும், காதலிமாட்டு - காதலியினிடத்தில், உள்ளம் வைப்பார்க்கும் - விருப்பம் வைத்திருப்பார்க்கும்,...
கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்று உற்றார்முன் தோன்றா உறாமுதல் - தெற்றென அல்ல புரிந்தார்க்கு அறந்தோன்றா எல்லாம் வெகுண்டார்முன் தோன்றாக் கெடும். பொருள்: கழிவு இரக்கம் - இழந்த பொருள்களுக்கு இரங்குதல், கற்றார்முன் தோன்றா - கற்றுணர்ந்த பெரியோர்பால் தோன்றாது; காதலித்து - ஊக்கங்கொண்டு ஒன்று உற்றார்முன் - ஒரு நன்முய...